ஜனகம் (தெலங்கானா): அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்புக்கு கரோனா: அதிர்ச்சியில் மரணமடைந்த ரசிகர்! - telangana trump fan died
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவரின் தீவிர ரசிகரான புசா கிருஷ்ணா, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ரசிகரான கிருஷ்ணா திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். ட்ரம்புக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்ட செய்தி வெளியானதிலிருந்து, கிருஷ்ணாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இச்சூழலில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வேளையில், அவரை சோதித்த மருத்துவர்கள், கிருஷ்ணா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
புசா கிருஷ்ணா ஜனகம் மாவட்டத்திலுள்ள பச்சன்பேட்டா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ட்ரம்பின் தீவிர ரசிகர் ஆவார். கிருஷ்ணா சில காலமாகவே ட்ரம்பை வீட்டில் வைத்து வணங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.