தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: அமெரிக்கா - இந்தியா கூட்டுறவு மன்றக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.

US India Strategic Partnership Forum (USISPF) called on PM Modi

By

Published : Oct 22, 2019, 3:43 AM IST

அமெரிக்கா - இந்தியா கூட்டுறவு மன்றக் குழுவினர் (Members of US India Strategic Partnership Forum (USISPF)) இந்தியா வந்துள்ளனர். இந்த குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, இந்தியாவின் நம்பிக்கையான அடுத்த ஐந்தாண்டுகள் உலகின் 25 ஆண்டுகளை வரையறுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரம் குறித்து அவர்களிடம் பேசினார். அப்போது, பொருளாதாரத்தை சீரமைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெருநிறுவன வரிக் குறைப்பு (கார்ப்பரேட்), தொழிலாளர் சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், அரசாங்கத்தின் இலக்கு எளிதான வாழ்வை உறுதி செய்கிறது என்றும் அவர் கோடிட்டு காட்டினார்.

இந்தியாவின் தனித்துவமான மூன்று “டி” (democracy, demography & ‘dimaag) குறித்து பிரதமர் மோடி விளக்கினார். இந்தியாவின் வலிமை என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியது, ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் மூளை (சிந்தனை) ஆகும்.

இதையும் படிங்க: 'மனங்களை இணைப்போம், எதிர்காலத்தை உருவாக்குவோம்' - தொடங்கியது துபாய் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details