தெலுங்கு ஊடக உலகின் முன்னோடியான ஈநாடு பத்திரிகை, ஈடிவி தொலைக்காட்சி, ரமோஜி ஃபிலிம் சிட்டி உள்ளிட்டவற்றை நிறுவியவர் ராமோஜி ராவ்.
ஊடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் ராமோஜி ராவை ஹைதராபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைவர் ஜோயல் ரீஃப்மேன், மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கும் ராமோஜி குழுமத்தின் செயல்பாடுகளால் ஈர்த்த ஜோயல் ரீஃப்மேன், தனிப்பட்ட முறையில் ராமோஜி ராவைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின் போது ராமோஜி ராவ், தான் கடந்துவந்த பாதை, தொழிலில் ஏற்பட்ட சவால்களைத் தாண்டி, தனது வெற்றியின் ரகசியம் குறித்து ஜோயல் ரீஃப்மேனிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, ஜோயல் ரீஃப்மேன் உடன் பொது விவகார அலுவலர் டிரீவ் ஜிப்லின், ஊடக ஆலோசகர் முகமது பாசித் உள்ளிட்டோர் ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள ஈடிவி பாரத் செய்தி ஊடக அலுவலகத்தைப் பார்வையிட்டனர்.
13 மொழிகளில் மொபைல் செயலி மூலமாக செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வழிநடத்திச் செல்வதற்காக ராமோஜி ராவை ரீஃப்மேன் பாராட்டினார்.