அமெரிக்க அதிபரான பின்பு தனது குடும்பத்துடன் கன்னிப் பயணமாக டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்தார். அவரது இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் மதச்சுதந்திரம் குறித்து வலியுறுத்தியதாகவும் அமெரிக்கா தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிர்பயா வழக்கு: நால்வருக்கு 3ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படுமா?