தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலாய் லாமாவுக்கு அமெரிக்க தூதர் பிறந்த நாள் வாழ்த்து! - dalai lama birthday wishes trending

டெல்லி: இன்று 85ஆவது பிறந்த நாள் காணும் தலாய் லாமாவுக்கு அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

dalai lama birthday wish
dalai lama birthday wish

By

Published : Jul 7, 2020, 12:02 AM IST

Updated : Jul 7, 2020, 12:32 AM IST

திபெத்தை சீனா ஆக்கிரமித்து தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டுள்ளது. அந்த நாட்டிலிருந்து பௌத்த துறவியான தலாய் லாமா வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். சீனாவை கண்டிக்கும் வகையில் தலாய் லாமா பிறந்தநாளான இன்று ஃப்ரீ சீனா என்ற வார்த்தை டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், “61 ஆண்டுகள் நீங்கள் இந்தியாவில் வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கு எழுற்சி ஊட்டும் வகையில் இருந்தது.

நீங்கள் எப்போதும் தங்களை இந்தியாவின் குழந்தை என்று தான் கூறியுள்ளீர்கள். உங்களுடன் நான் இருந்த நாள்கள் மிகவும் அற்புதமானவை மேலும் உங்கள் பிறந்தநாள் அன்று நானும் அமெரிக்க மக்களும் வாழ்த்து தெரிவிக்கிறோம்” என கூறிவுள்ளார்.

இதேபோல் சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியாவில் வாழும் தலாய் லாமாக்கு இன்று அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி

Last Updated : Jul 7, 2020, 12:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details