தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு விண்ணப்பிக்கத் தயாரா?

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 குறித்தான அறிவிப்பை ஒன்றிய பொது சேவை ஆணையம் (UPSC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது

upsc preliminary exams notification
upsc preliminary exams notification

By

Published : Feb 22, 2020, 9:13 PM IST

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services Preliminary Examination) குறித்தான அறிவிப்பை ஒன்றிய பொதுசேவை ஆணையம் (UPSC) அறிவித்துள்ளது. ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஆர்எஸ் (IRS) உள்ளிட்ட 24 வகையான உயர்நிலைப் பணிகளில் 796 காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்காக 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தத் முதல்நிலைத் தேர்வானது மே மாதம் 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம். மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு அங்கீகரித்த பல்கலைக்கழங்களிலோ, கல்வி நிறுவனங்களிலோ விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஒரு இளநிலைப் பட்டமோ அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியையோ பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 32 வயது வரம்பில் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் சுமார் 72 நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நிலையில் இந்தத் தேர்வு குறித்தான கூடுதல் தகவல்களை https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இதையும் படிங்க: ஆயிரம் ரூபாயில் #UPSC பயிற்சி! அசத்தும் தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details