பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட அவர், விலைவாசி உயர்வு குறித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட இளைஞர் ஒருவர் முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் பேசிய அகிலேஷ், பாஜக பிரமுகர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டியதாகத் தெரிவித்தார். இதுபெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. அகிலேஷ் யாதவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தி? கட்சியில் பெருகும் ஆதரவு!