தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சுயசார்ப்பு பொருளாதார திட்டம் இந்தியாவை மாற்றியமைக்கும்'- ஜே.பி. நட்டா - bjp in assam

டெல்லி: கரோனா நெருக்கடி காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சுயசார்பு பொருளாதார திட்டம் இந்தியாவை மாற்றியமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

By

Published : Jun 24, 2020, 8:50 AM IST

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அரசியல் தலைவர்களுடன் ஆறு முறை சந்திப்பு நடத்தியுள்ளார்.

ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது இவ்வாறு நடக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் மாநிலங்களின் பரிந்துரைகளை கேட்டுகொண்டுள்ளார்.

மத்திய அரசின் சுயசார்ப்பு பொருளாதார திட்டம் (ஆத்மநிர்பார் பாரத் அபியான்) நாட்டை மாற்றியமைக்கும்.

சிறு, குறு தொழில்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: அரசு காப்பகத்தில் சிறுமிகள் கர்ப்பம்: உயர்மட்ட விசாரணை கோரும் மாயாவதி

ABOUT THE AUTHOR

...view details