உத்தரப் பிரதேச மாநிலம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்மரம் யாதவ். நேற்று, தேவி மாதா கோயிலுக்குச் சென்ற இவர், தனது நாக்கை வெட்டி தேவி மாதா சிலைக்கு முன்பு வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, யாதவை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், யாதவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்றபோது கோயிலில் இருந்த சியாம் சுந்தர் இதுகுறித்து கூறுகையில், "நாக்கை வெட்டிக் கொள்வதற்கு முன்பே, தனக்குள் கடவுள் புகுந்துவிட்டதாக யாதவ் தெரிவித்தார். கடவுளுக்குப் பரிசாக தனது தலையை வெட்டி காணிக்கையாக செலுத்த விரும்பியதாக தெரிவித்தார். ஆனால், இதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.