தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சராக மூன்றாண்டுகள் இருந்து சாதனை படைத்த யோகி - முதலமைச்சராக மூன்றாண்டுகள் இருந்து சாதனை படைத்த யோகி

லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாண்டுகள் இருந்ததன் மூலம் யோகி ஆதித்யநாத் சாதனை படைத்துள்ளார்.

Yogi
Yogi

By

Published : Mar 15, 2020, 9:36 PM IST

உத்தரப் பிரதேசத்தின் 21ஆவது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் மார்ச் 19ஆம் தேதி 2017ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து மூன்றாண்டுகளாக முதலமைச்சராக இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன்பு, கல்யான் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளனர்.

இரண்டு முறை முதலமைச்சராக இருந்துள்ள கல்யான் சிங், 1991ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி முதல் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வரை இருந்தார். பின்னர், 1997 செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 1999 நவம்பர் 12ஆம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார். இதற்கு பின்பு, 1999 நவம்பர் 12ஆம் தேதி முதல் 2000 அக்டோபர் 28ஆம் தேதி வரை ராம் பிரகாஷ் குப்தா முதலமைச்சராக இருந்தார்.

2000 அக்டோபர் 28ஆம் தேதி முதல் 2002 மார்ச் 8ஆம் தேதி வரை ராஜ்நாத் சிங் முதலமைச்சராக இருந்தார்.

இதையும் படிங்க: கரோனாவை விட பாஜக வைரஸ் கொடியது - அசாம் முன்னாள் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details