உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தின் பெண் துணை காவல் ஆய்வாளர், அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சந்தீப் சவுகான் என்பவர் திருமணம் செய்துகொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக மீரன்பூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புகாரில், காவல் ஆய்வாளர் சந்தீப் சவுகான் என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி வரதட்சணையாக ரூ. 10 லட்சம் மற்றும் கார் ஒன்றை கேட்டு முதற்கட்டமாக ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டார். அதன்பின் அவர், கடந்த மார்ச் மாதம் என்னை காஜியாபாத் மாவட்டம் போபுரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்தார்.