தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கணவரின் அதீத காதல்... சண்டையே போடமாட்டேங்குறாரு' - விவாகரத்து கேட்ட மனைவி! - கணவர் சண்டை போடததால் விவாகரத்து கேட்கும் மனைவி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கணவர் சண்டை போடாத காரணத்தைச் சொல்லி மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ip
upup

By

Published : Aug 23, 2020, 9:08 PM IST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், விவாகரத்து மனு ஒன்றை 'சரியா' நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அப்பெண்மணி கூறிய காரணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், 'எங்களுக்குத் திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன. சில சமயங்கள் சமையலறையிலும், வீட்டு வேலைகளிலும் உதவி செய்வார். இதுவரை, எங்களுக்குள் சண்டை ஏற்படவில்லை. நான் ஏதேனும் தவறு செய்தாலும், அவர் உடனடியாக மன்னித்து விடுகிறார். எனக்கு அவருடன் சண்டை போட வேண்டும். கணவரின் அதீத காதல் வேண்டாம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த காரணத்திற்கெல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என வழக்கைத் தள்ளுபடி செய்தார். இப்பிரச்னையை 'உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்' என அறிவுறுத்தினர்.

இதேபோல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் உச்சகட்ட அன்பும், பாசமும் தாங்க முடியவில்லை; விவாகரத்துத் தாருங்கள் என நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details