தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உன்னாவ் சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை...! - உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை

லக்னோ: உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த மேலும் மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

UP unnao girl rape case

By

Published : Oct 4, 2019, 8:38 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு உன்னாவ் சிறுமியிடம் பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார்அத்துமீறி பாலியல் வல்லுறவில்ஈடுபட்டார்.

மேலும் சமீபத்தில் அச்சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது உறவினர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் சந்தேகங்களை மேலும் வலுவாக்கியது. இதனால் சிபிஐ இந்த வழக்கில் குல்தீப் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தது.

மேலும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சுபம் சிங், நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ் சிங் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் தற்போது முன்பிணையில் வெளியே உள்ளனர்.

அச்சிறுமியை குல்தீப் சிங் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக சுபம் சிங்கின் பெயரே இரண்டாவது முக்கிய குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த நபருக்கு 10 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details