உத்தரப் பிரதேச மாநிலம், துபாவல் கிராமத்தில் சிவ்பூஜன் பிண்டு என்பவர் அரசாங்கத் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டியுள்ளார். இதனை கழிப்பறையாக பயன்படுத்தாமல் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளர்.
கழிப்பறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு குழந்தைகள் பலி
உத்தரப் பிரதேசம்: கழிப்பறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு குழந்தைகள் பலி, பலத்த காயமடைந்த ஒரு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று, கழிவறைக்கு அருகில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது, தீடீரென ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது. இந்நிலையில், அருகில் சென்று பார்ததபோது, குழந்தைகள் பலத்த காயமடைந்து துாக்கி வீசப்பட்டிருந்தனர். இந்த விபத்தில் சிவ்புஜன் பிண்டின் குழந்தைகள் விஜயசங்கர்(4), சிறுமி சோனம்(6) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், படுகாயமடைந்த குழந்தை, ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், குழந்தைகள் அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.