நாட்டின் 11ஆவது பாதுகாப்பு கண்காட்சி உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடந்துவருகிறது. இந்த பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் லக்னோவில் நடந்த கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஏற்றுமதியில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை எட்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும். அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பங்கு அளப்பரியதாக இருக்கும்” என்றார்.