உத்தரப் பிரதேச மாநிலம் சாஸ்திரி நகர் பகுதியில் ஆதர்ஷ் ஜன்தா இன்டர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவ- மாணவியருக்கு உடல் நிலை குறித்து சோதனை நடந்துள்ளது. அப்போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு தர்ம அடி - சில்மிஷம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள், ஆசிரியரை மீட்டனர். இதனையடுத்து பேசிய காவல் அலுவலர் நாகேந்திர சிங், “மாணவ-மாணவியருக்கு சுகாதார சோதனை நடந்துள்ளது. அப்போது சில மாணவிகள் தாங்கள் அசௌகரியமாக உணர்ந்ததை வீட்டிலுள்ளவர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்கியுள்ளனர். இதில் சில மாணவர்களும் அடங்குவார்கள். விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்