கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 500 தபால் நிலையங்களில் சானிடைசரை விற்பனை செய்ய முடிவு அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
தபால்துறையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேக்தூட் கிராமோடியோக் சேவா சான்ஸ்தான் (Meghdoot Gramodyog Sewa Sansthan) உற்பத்தியாளர்களிடமிருந்து, சானிடைசர் பெற்று அதனை தபால் நிலையங்களில் விற்பனை செய்ய உள்ளதாக தலைமை தபால் துறை அலுவலர் கவுசலேந்திர குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.