தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

மீரட்: உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்.

UP police issues 'wanted' posters of anti-CAA rioters in Meerut
UP police issues 'wanted' posters of anti-CAA rioters in Meerut

By

Published : Dec 23, 2019, 7:36 PM IST

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர்.
இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் முகங்களை ரகசிய கண்காணிப்பு கேமரா வாயிலாக காவலர்கள் கண்கானித்து கண்டுபிடித்துள்ளனர்.
இதில் முதல்கட்டமாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை காவல் கூடுதல் பொது இயக்குனர் பிரசாந்த் குமாரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “மீரட் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் முகங்களும் சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானமாக ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும்” என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மீரட், பக்ரைச், பரேலி, வாரணாசி, பாதோகி, கோரக்பூர் மற்றும் சம்பல் உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details