தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உ.பி.யில் கைது? - தலித் பெண் மனிஷா வால்மீகி

லக்னோ: உயிரிழந்த ஹத்ராஸ் பட்டியலின பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தடுத்துவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உ.பி.,யில் கைது!
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உ.பி.,யில் கைது!

By

Published : Sep 30, 2020, 6:38 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆளரவரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை சிலர் கண்டெடுத்தனர்.

பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

உள்ளூர் காவல் துறையினர் இரவோடு இரவாக இறுதிச் சடங்குகளை நடத்துமாறு அந்தக் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தியதாக அப்பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவரும், பீம் ஆர்மி இயக்கத்தின் நிறுவனருமான ஆசாத், அதன் டெல்லி மாநில அமைப்பாளர் பால்மீகி ஆகியோர் நேற்று உத்தரப் பிரதேசத்திற்கு வந்தடைந்தனர்.

இந்தத் தகவலை அறிந்த காவல் துறையினர் அவர்கள் இருவரை அலிகாரிலிருந்து தப்பால் செல்லும் பாதையில் அமைந்துள்ள யூத டோல் பிளாசா அருகே தடுத்து கைதுசெய்ததாகத் தெரிகிறது.

அவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

ABOUT THE AUTHOR

...view details