தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைனில் வேலை தேடுபவர்களை ஏமாற்றிய கும்பல் கைது! - Online jobs

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போலி வலைதளங்கள் மூலம் வேலை தேடுபவர்களை ஏமாற்றி பணம் பறித்த ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆன்லைனில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் கும்பல் கைது
ஆன்லைனில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் கும்பல் கைது

By

Published : Jan 5, 2021, 7:41 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சமூக ஊடகங்களில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் செய்து அதன் மூலம் வேலை தேடி வருபவர்களிடம் பணம் பறித்து வருவதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, பொதுமக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து போலி வலைத்தளங்களிலிருந்து பணம் பறித்த சோனு சர்மா, சத்வீவர் சிங், விர்பன் சிங், லவ் குஷ், ஓம்கர், அமோல் சிங், தர்மேந்திரா ஆகிய ஏழு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல் துறை விசாரணை:

மேலும், தலைமறைவாகவுள்ள தர்மேந்திரா, அசோக், விஜய் குமார் ஆகிய மூவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து, மடிக்கணினிகள், 14 செல்போன்கள், 12 சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடரந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கும்பல் பல போலி வலைத்தளங்களை உருவாக்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கட்டணங்களைக் குறிப்பிட்டு பணம் பறித்துவந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details