கோயில் நகரமான அயோத்தியில் உத்தரப் பிரேதச காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து, வட்ட அலுவலர் அமர் சிங் கூறுகையில், ”நகரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி வழியாக செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. இது வழக்கமான சோதனைதான்.
சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களின் வாகனங்களையும், அவற்றின் பின் இருக்கைகளையும் சோதனை செய்துவருகிறோம். இந்த சோதனையானது அனைத்து கண்ணோட்டத்திலும் நடைபெறுகிறது. இதற்கு குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க:
மதிய உணவுத் திட்டம் : அனைவருக்கும் பயனுள்ளதாக்க உரிய திட்டமிடல் அவசியம்!