உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தொடக்கப் பள்ளிகளில் உதவி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு தான் பொதுப் பிரிவினருக்கு (general category candidates) 65 விழுக்காடும், பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு (reserved category candidates) 60 விழுக்காடு என கட்-ஆஃப் மதிப்பெண்களாக அறிவிக்கப்பட்டது.
கட் ஆஃப் மதிப்பெண்களை முன்பே அறிவித்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து மாநில அரசு கூறுகையில், " சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கத்திற்காக தான், கடந்த ஆண்டு தேர்வு கட்-ஆப் மதிப்பெண்ணை அதிகரித்தோம் " என்றனர்.