மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வரவேற்றார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் மங்கோலிய அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்றார். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு மரியாதையையும் மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா ஏற்றுக் கொண்டார்.
"யமுனைக் கரையில் உள்ள தாஜ்மஹால் என்னே அழகு" - வியந்த மங்கோலிய அதிபர்! - Mongolian prime minster visit on tajmahal
டெல்லி: ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

இன்று தனது நாட்டுப் பிரதிநிதிகளுடன் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா சுற்றிப் பார்த்தார். பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுற்றுலாப்பயணிகளின் குறிப்புப்புத்தகத்தில், தாஜ்மஹால் என்னே அழகு என வியந்து குறிப்பு எழுதியுள்ளார், மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா. இந்தச் சுற்றுப்பயணத்தில் இருநாட்டிற்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த மோடி இந்தியா வருகை!