தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதுராவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு - மதுராவில், சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு

லக்னோ: மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP: Minor gang-raped by three men in Mathura
UP: Minor gang-raped by three men in Mathura

By

Published : Jan 19, 2020, 7:32 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில், சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் தீவனம் சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை மூன்று பேர் மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்பேரில் பவன் என்பவரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் காவலர்கள் பதிவு செய்தனர்.

இதற்கிடையே சிறுமிக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்தச் சோதனைக்கு சிறுமி 70 கிலோ மீட்டர் அப்பால் பயணம் செய்தார். வழக்கு குறித்து விசாரணை செய்யும் காவலர் அலோக் துபே, குற்றவாளிகளில் ஒருவரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் குற்றவாளிகள் மூன்று பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details