மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குரவாளி என்னும் பகுதியில் விக்னேஷ் குமாரும் (35), அவரது மனைவி கீதா தேவியும் (32) வசித்துவந்தனர். இந்நிலையில் இவர்களின் குழந்தை வைஷ்ணவி நேற்று தொடர்ந்து அழும் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தம்பதி இருவரும் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோப்ப நாயைக் கொண்டு யார் கொலைசெய்தது என்று தேடினர்.