தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போக்குவரத்து விதி மீறல் - 51 காவலர்களுக்கு அபராதம்! - விதிகளை மீறிய காவலர்கள்

லக்னோ: போக்குவரத்து விதிகளை மீறியதால் 51 காவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Traffic Policemen

By

Published : Sep 7, 2019, 6:25 PM IST

போக்குவரத்து விதிகளை காவலர்கள் மீறிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருந்தது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 51 காவலர்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரியவந்துள்ளது.

இரண்டு காவல் ஆய்வாளர்கள், ஏழு உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர், காவலர் ஆகியோர் விதிகளை மீறியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச டிஜிபி ஓ.பி. சிங் கூறுகையில், "இனி போக்குவரத்து விதிகளை காவலர்கள் மீறினால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை அபராதம் விதிக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details