தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விக்ரம் ஜோஷி கொலை: மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சக பத்திரிகையாளர்கள்! - Vikram Joshi killing

லக்னோ: பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக்கோரியும் அவரின் சகப் பத்திரிகையாளர்கள் மருந்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

protwts
rotwst

By

Published : Jul 22, 2020, 7:25 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது உறவுக்காரப் பெண்ணை இளைஞர்கள் சிலர் தொடர்ந்து கேலி செய்துவருவதாகச் சில நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தனது மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விக்ரம் ஜோஷியை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விக்ரம் ஜோஷியுடன் பணிபுரிந்த சக பத்திரிகையாளர்கள், யசோதா மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என முழுக்கங்களை எழுப்பினர்.

இச்சம்பவத்தால் வேலை செய்ய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், நீதி கிடைக்கும் வரை எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அவர்கள் கூறினர். இதுவரை ஒன்பது பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details