தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எஸ்.டி.பி.ஐ. கட்சியை குறிவைக்கும் உ.பி. அரசு: தஸ்லிம் ரெஹ்மானி குற்றச்சாட்டு - CAA

டெல்லி: உத்தரப் பிரதேச அரசு எஸ்.டி.பி.ஐ. கட்சியை குறிவைப்பதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் தஸ்லிம் ரெஹ்மானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

UP govt's report on violence targets Popular Front of India: Tasleem Rehmani
UP govt's report on violence targets Popular Front of India: Tasleem Rehmani

By

Published : Jan 3, 2020, 8:28 AM IST

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் தஸ்லிம் ரெஹ்மானி நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.) எதிராக நடந்த போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் பங்கேற்றன. ஆனால் இந்தப் போராட்டங்கள் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் மட்டும் குறிவைக்கப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக எஸ்.டி.பி.ஐ. குறிவைக்கப்படுகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது காவலர்களின் நடவடிக்கையால் பொதுமக்கள் உயிரிழந்தனர். பொதுமக்களைப் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. ஒரு அரசு நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டை கூறலாம்” என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களில் நடந்த வன்முறை குறித்து மாநில அரசு காவலர்களிடம் அறிக்கை கோரியுள்ளது.

இதையும் படிங்க: 'தேசத்தை தட்டியெழுப்பி விட்டீர்கள்' - ஜாமியா பல்கலை மாணவர்களுக்கு நடிகை பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details