தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி வழக்கு: மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - அயோத்தி வழக்கு

லக்னோ: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சன்னி வஃக்பு வாரியம் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

UP govt allots five acres of land to Sunni Waqf Board UP govt allots land to Sunni Waqf Board near Ayodhya Yogi Adityanath allots land to Sunni Waqf Board 5 acres land in Dhannipur village in Ayodhya on the Lucknow highway சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு அயோத்தி வழக்கு சன்னி வஃக்பு வாரியம், உச்ச நீதிமன்றம், ராம ஜென்ம பூமி, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா, மசூதி கட்ட நிலம் ஒதுக்கீடு
UP govt allots five acres of land to Sunni Waqf Board near Ayodhya

By

Published : Feb 5, 2020, 6:17 PM IST

Updated : Feb 5, 2020, 7:03 PM IST

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின்படி, மூன்று மாதத்துக்குள் சன்னி வஃக்பு வாரியத்துக்கு அவர்கள் விரும்பும் வகையில் ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அந்தக் காலக்கெடு வருகிற 9ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் சன்னி வஃக்பு வாரியத்துக்கு மசூதி கட்டிக்கொள்ள உத்தரப் பிரதேச அரசு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த நிலம் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோகாவல் தாலுகா தன்னிபுரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இதற்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று காலை (05.02.20) மக்களவையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ட்ரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதற்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயிலை நிர்வகிக்க உருவானது ராம் மந்திர் அறக்கட்டளை!

Last Updated : Feb 5, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details