ஆளுநர் மாளிகைக்கு வந்த கடிதம் ஒன்றில், 10 நாட்களுக்குள் ஆனந்திபென் படேல் ஆளுநர் மாளிகையை காலி செய்யாவிட்டால் அம்மாளிகை வெடி வைத்து தகர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம், டிஎஸ்பிசி ஜார்கண்ட் குழுவிடமிருந்து இந்தக் கடிதம் வந்ததாக ஆளுநர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹஸ்ர்த்காஞ்ச் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 124-இன் (ஆளுநர்/ஜனாதிபதிக்கு மிரட்டல் விடுப்பது) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹேமந்த் ராவ், ஆளுநருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம், மேற்படி நடவடிக்கைக்காக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஷ்தி இதுபற்றி, உள்துறை அமைச்சகம் இதனை முக்கிய பிரச்னையாக கருதுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் புதன் கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎஸ்பிசி குழு என்பது ஜார்கண்ட்டில் இயங்கிவரும் முக்கிய நக்சல் குழுவின் கிளைக் குழு என கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகைக்கு அச்சுறுத்தல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'என்னை மன்னிச்சிடு, அம்மாகிட்ட போ' - அம்ருதாவின் தந்தை இறப்புக்கு முன் எழுதிய கடிதம்