உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த எட்டு பேர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதில் விபத்தை ஏற்படுத்திய கார் மொஹாதிபூரைச் சேர்ந்தது என்றும், காரை இயக்கியது ஷோ ரூம் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி, காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோரக்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.