உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அம்மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 805ஆக அதிகரித்தது. குறிப்பாக, காசியாபாத் நகரின் 13 பகுதிகளில் இத்தொற்றின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதனால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அப்பகுதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
ட்ரோன் உதவியுடன் கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு! - காசியாபாத் கரோனா வைரஸ்
லக்னோ: காசியாபாத் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள இடங்களை காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் கண்காணித்துவருகின்றனர்.
![ட்ரோன் உதவியுடன் கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு! UP: Ghaziabad Police use drones to monitor COVID-19 hotspots](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6827273-914-6827273-1587116027475.jpg)
UP: Ghaziabad Police use drones to monitor COVID-19 hotspots
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை காசியாபாத் மாவட்ட காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸால் 13 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை...
Last Updated : Apr 17, 2020, 5:04 PM IST