உத்தரப் பிரதேசம் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் ஒரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அவரும் அவர் மனைவியும் பல ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.
கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க நீதிமன்றம் உத்தரவு - ஏன் தெரியுமா? - குடும்ப நல நீதிமன்றம்
லக்னோ: பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு அரசு ஓய்வூதியம் பெறும் மனைவி மாதம் ரூ 1000 வழங்க வேண்டுமென உத்தரப் பிரதேசம் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Court order
எனவே மனைவியிடமிருந்து மாதம் பராமரிப்பு செலவுக்காகப் பணம் பெற்றுத் தருமாறு 2013ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று(அக்-21) நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு ரூ 12,000 ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண் தனது கணவருக்கு மாதம் ரூ.1000 பராமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.