உத்தரப் பிரதேச மாநிலம் பரபாங்கி மாவட்டத்தில் ஆண், பெண் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், அதற்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மரத்தின் மீது ஒரே கயிற்றில் இருவர் தற்கொலை! - பாரபங்கி மாவட்டம்
லக்னோ: பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் 22ஆம் தேதி இரவிலிருந்தே காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அதன் பிறகே இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.