சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ஆசம்கான். சமாஜ்வாதி, அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளால் ஆசம்கான் அதிருப்தியில் இருப்பதாக அவரது உறவினர் சமீர் அஹமது கான் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் ஷாநவாஸ் ஆலம், “ஒரு கட்சிக்கு தனது வாழ்நாளின் முப்பது ஆண்டுகளை வழங்கிய ஒரு தலைவர் இந்த முறையில் தனிமைப்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. சமாஜ்வாதி தனது மிக உயரமான தலைவர்களில் ஒருவரின் பின்னால் நிற்க முடியாவிட்டால், அந்தக் கட்சி எவ்வாறு சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? என்றார்.