தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தோல்வியை ஏற்றுக்கொண்டு உ.பி காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்! - 2019 மக்களவை தேர்தல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் பதவி விலகியுள்ளார்.

raj babar

By

Published : May 24, 2019, 12:14 PM IST

நடந்துமுடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் 302 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக தனிப் பொரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதில், முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 63 தொதிகளை அக்கட்சி கைப்பற்றியுள்ளது

அதேசமயம், காங்கிரஸ் சார்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மட்டுமே ரேபரேலியில் வென்றுள்ளார். அமேதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திகூட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த படுந்தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு உத்தப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் பதவி விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை தந்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக என்னால் நிறைவேற்ற முடியவலை என்பது எனக்கு வருத்தத்தை தருகிறது. இதுகுறித்து கட்சி மேலிடத்தில் ஆலோசனை செய்வேன்' என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details