தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'முதலமைச்சர் யோகிக்கு புகைப்படங்கள் எடுக்க மட்டும் நேரம் உள்ளது' - பிரியங்கா காந்தி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக 13 குற்றங்கள் நடந்துள்ளன. இதைப்பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் யோகிக்கு நேரம் இல்லை. ஆனால் புகைப்படங்கள் எடுக்க நேரம் இருக்கிறது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

up-cm-does-not-have-time-to-hold-special-session-on-crimes-against-women
up-cm-does-not-have-time-to-hold-special-session-on-crimes-against-women

By

Published : Oct 16, 2020, 8:26 PM IST

ஹத்ராஸ் விவகாரத்திற்கு பின் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக 13 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக 13 கொடூர குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில், நான்கு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டோ அல்லது தற்கொலை செய்துகொண்டனர். மாநில பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் யோகிக்கு நேரம் இல்லை. ஆனால் புகைப்படங்கள் எடுக்க நேரம் அதிகமாக இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.

பல்லியா மாவட்டத்தில் உள்ள பாஜக தலைவர் திரேந்திர பிரதாப் சிங், அரசு ஒதுக்கீட்டின் கீழ் கடைகளை ஒதுக்கக் கோரிய கூட்டத்தில் ஒருவரை சுட்டுக் கொன்றதாகக் கூறிய பின்னர், இந்த அறிக்கை வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பற்றி பிரியங்கா காந்தி உ.பி., அரசை விமர்சித்திருந்தார். ஹர்தாஸ் விவகாரத்திற்கு பிறகு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அனைத்து குற்றச் சம்பவங்களும் வெட்டவெளிச்சமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details