இது குறித்து யோகி ஆதித்யநாத், சட்டசபைக்கு வரும் அமைச்சர்களுள் சிலர், தங்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி விளையாடுவதும், வெகு நேரம் காணொலி பார்ப்பதுமாக உள்ளனர்.
மொபைல் போனை பயன்படுத்த தடைவிதித்தார் யோகி ஆதித்யநாத்! - செல்போன் தடை
லக்னோ: சட்டப்பேரவைக்கு வரும் அமைச்சர்கள் தங்களின் மொபைல் போனை கொண்டுவர தடைவிதித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சட்டப்பேரவையில் அமர்ந்திருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இது கவன சிதறலை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் மொபைல் போன்களை சைலன்ட், ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி அறிவுறுத்தினாலும் கூட அமைச்சர்கள் விவாதிக்கப்படும் விஷயங்களில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்த தவறுகிறார்கள். ஆகையால் ஒட்டுமொத்தமாக மொபைல் போன்களை கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது." என்றார்.
பொதுவாக பாஜக கட்சி சார்பாக நடக்கும் அமைச்சர் கூட்டங்களில், அமைச்சர்கள் தங்களின் மொபைல் போன்களை கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது, இந்த விதிமுறையானது பல ஆண்டுகாலமாக உள்ளதென அமைச்சர் வட்டாரங்கள் கூறுகின்றனர்.