பாபர் மசூதி வழக்கில் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் அமைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து கோயில் அறங்காவல் குழு அமைக்கப்பட்டு, ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கோயில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் அறங்காவலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தனி மனித இடைவெளி கடைபிடித்து கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், இன்று மதியம் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட உள்ளார். இது குறித்து, ''ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மதியம் பார்வையிடுவார். தொடர்ந்து அயோத்தியில் உள்ள சில அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்'' என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பார்வையிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள் தாயகம் திரும்பினர்