தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமர் கோயில் ஏற்பாடுகள் தீவிரம்; அயோத்திக்குச் செல்லும் முதலமைச்சர் யோகி

டெல்லி: ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி செல்கிறார்.

யோகி
யோகி

By

Published : Jul 25, 2020, 12:30 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, அதனைத் தொடங்கிவைப்பார் என கோயில் அறக்கட்டளைத் தலைவர் மகந்த் கோபால் தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (ஜூலை 25) அயோத்தி செல்கிறார்.

கடந்த நவம்பர் 9ஆம் தேதி, சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கோயிலுக்கான அறக்கட்டளைக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு கோயில் கட்டுமானப் பணிகளை நிர்வகித்துவருகிறது.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனை மைய கழிவறையில் சிறுமிக்கு வன்கொடுமை

ABOUT THE AUTHOR

...view details