உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு யாரோ ஒருவர் கொலை மிரட்டல்விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். மிரட்டல் விடுத்தவரின் எண்ணானது வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருந்ததால், இந்த வழக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், வெளிநாட்டில் செயல்பட்டுவந்த இந்த எண் சில நாள்களாக இந்தியாவிற்குள் செயல்படுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தொலைபேசி எண்ணின் செயல்பாட்டைக் கொண்டு விசாரணை நடத்தினர்.