உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹதோஹி மாவட்டத்தில், நேதா நகர் இருப்புப்பாதை கிராசிங்கில், இந்த 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்கள் 5 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களது பெயர்கள் சுரேந்திர குமார் ஜெய்ஸ்வால், பீம் பிரசாத் குப்தா, ஹரேந்திர குமார் பால், ராஜேஷ் பால் மற்றும் தீரஜ்குமார் என அறியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 750 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான 5 பேர்களிடமிருந்தும் இரண்டு இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், மூன்று ஆதார் கார்டுகள், மூன்று வாகன உரிம அட்டைகள் மற்றும் மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.