காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதனிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், "சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய மற்ற உறுப்பு நாடுகள், காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தன. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது" என்றார்