தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உன்னாவ் வழக்கில் முக்கிய சாட்சி திகார் சிறைக்கு மாற்றம்! - Kuldeep Singh Sengar

டெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியின் பாதுகாப்பு கருதி அவரை திகார் சிறைச் சாலைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குல்தீப் சிங்

By

Published : Aug 2, 2019, 1:55 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் குல்தீப் சிங்குக்கு சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் அவர் பாஜகவிலிருந்தும் நீக்கம்செய்யப்பட்டார்.

குல்தீப் சிங்

இது குறித்து விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும் ஆனாலும் இன்னும் முழுமையாக ஆபத்தான நிலையிலிருந்து வெளியே வரவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெவிக்கப்பட்டது. மேலும், வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமாவை பாதுகாப்பு கருதி டெல்லியிலுள்ள திகார் சிறைச் சாலைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச சிறையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா பத்திரமாக இருப்பதாக வாதாடினாலும் உபி வழக்கறிஞர் அவரை திகார் சிறைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ABOUT THE AUTHOR

...view details