உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், நேற்று நீதிமன்றம் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். பெரும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில், "90 விழுக்காடு தீக்காயங்களுடன் அப்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கென சிறப்பான சிகிச்சை அளிக்க தனியாக ஒரு மருத்துவக் குழுவை அமைத்துள்ளோம். இருப்பினும் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு" என்று தெரிவித்துள்ளது.