உன்னவ் (உத்தர பிரதேசம்): உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக நிர்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குல்தீப் சிங் செங்காரின் மகள் ஐஸ்வர்யா செங்கார், ட்வீட் பதிவை எதிர்த்து காங்கிரஸ் நிர்வாகியான அல்கா லம்பா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு எதிராக பதிவிட்ட அல்கா லம்பா! - Twitter
உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக நிர்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குல்தீப் சிங் செங்காரின் மகள் ஐஸ்வர்யா செங்கார், ட்வீட் பதிவை எதிர்த்து முன்னாள் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியும், தற்போதைய காங்கிரஸ் நிர்வாகியுமான அல்கா லம்பா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னாள் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும், தற்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான அல்கா லம்பா, தனது ட்விட்டர் பக்கத்தில் உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பிணை வழங்கியதை எதிர்த்து பதிவிட்டார்.
அதில், “குல்தீப் தவறான சொற்களை பயன்படுத்திய குற்றத்திற்கு பிணை கிடைத்ததுள்ளது என மாநில அரசை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். இந்த பதிவு தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், மனதளவில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது என குற்றவாளியின் மகள் மாவட்ட காவல் துறையை அணுகி வழக்குப் பதிந்துள்ளார்.