உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் 2017ஆம் ஆண்டு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு அப்பெண் தீக்குளிக்க முயன்றபோது இச்சம்பவம் வெளியே வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் ஷெனீகர், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.