உத்தரப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அம்மாநில முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குல்தீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அச்சிறுமியின் தந்தையும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், காவலில் இருக்கும்போதே, அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அச்சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் சென்ற கார் லாரி மோதியதில் சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானது. அதை திட்டமிட்டு செய்தது குல்தீப் சிங் என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையாக எழுந்தன. அதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.