ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு இன்று (செப்.30) அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 15இல் இருந்து திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் செயல்படலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்.15ஆம் தேதி முதல் நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், வர்த்தக கண்காட்சிகள் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அன்லாக் 5.0: திரையரங்குகளை திறக்க அனுமதி - cinema halls to be opened
unlock
20:04 September 30
மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்.31ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, அரசு இயந்திரத்தின் மீது கேள்வி எழுப்புகிறது' - டி.ராஜா
Last Updated : Sep 30, 2020, 9:35 PM IST