இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி கோயிலும் ஒன்று. சுமார் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் இக்கோயிலுக்கு வருவது வழக்கம். இருப்பினும் கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் நாட்டிலுள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலும் கரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு அன்லாக் 1.o (Unlcok 1.0) என்ற பெயரில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகிறது. நாடு முழுவதுமுள்ள வழிபாட்டுத் தலங்களை ஜூன் 8ஆம் தேதி முதல் திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.
அதன்படி, கரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த திருமலை திருப்பதி ஏழுலையான் கோயில், சுமார் 80 நாள்களுக்குப் பின் இன்று வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாள்களுக்கு, திருப்பதி தேவஸ்தான ஊழியர்களும், உள்ளூர் மக்களும் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 நாள்களுக்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி ஜூன் 11ஆம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தினசரி 6 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய பாஸ் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி கோயில் குறித்து அவதூறு: நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!